Friday, 10 May 2019

இப்லீஷ் என்கின்ற சாத்தான் -ரமலான்5

இப்லீஷ் என்கின்ற சாத்தான் -ரமலான்5
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்
முதலில் அந்த நெருப்பு 
விளக்காகத்தான் இருந்தது 
அதன் வெளிச்சம் கல்வியை விதைத்தது.. 
நெருப்பென்பது உயரம் என்று 
தன்னையே புகழ்ந்து கொண்டது... 
நெருப்பை எல்லோரும் ஆராதித்தார்கள் 
கடவுளுக்கு இரண்டாமிடமெனத் 
தன்னை வார்த்துக் கொள்ளத் தொடங்கியது 
படைத்தவனின் புன்னகையில் 
சிறு நெருப்பொன்று மெல்ல ஒளிர 
களிமண் ஈரக்கசிவுகளில் 
மனிதன் மெல்ல எட்டிப் பார்த்தான்.. 
இவன் உன்னதன் என்றவுடன் 
படைத்தவன் படைப்புகள் ஸலாம் உரைத்தன.. 
தள்ளி நின்ற குள்ள நெருப்பன் 
கொழுந்து விட்டெரிந்தான்... 
அகந்தை பூத்த சாம்பலுக்குள் 
அமர்ந்திருக்கும் நெருப்பு ஆபத்தானது... 
அன்று முதல் 
தொட்டுவிடத் துடிக்கிறது ஆங்காரத்தீ 
அவன் பெயர் இப்லீஷ் 
சுட்டுவிடாமல் நகர்கிறவன் மனிதன். 
கருணை மேகம் கூடவே வருகிறது.

- மு.முகமது பாட்சா*
11/05/2019

No comments:

Post a Comment

Popular Posts