Sunday, 5 May 2019

மீனாகத் தவிக்க...



கோடுகளைப் போட்டுவிட்டுத்தான் 
அதனை 
மீறவே முயற்சி செய்கிறேன் 
விசையை உன் 
கைகளில் வைத்திருக்கிறாய் 
நானதை காதலென்றே 
கண்ணைக் கட்டி ஏற்றுக்கொள்கிறேன்... 
உன் சுவாசமாவது 
என் மீது தெறித்து நகரட்டும் ... 
நான் தனியல்ல ... 
நான் தனியல்ல... 
நீ நிழலென்பதும் மாயை... 
என் இமைகளை உடைத்த அருவி நீ... 
எல்லைகள் கடந்த அலையும் நீ... 
நான் நீந்துகிறேன் ... 
நான் நீந்துகிறேன்... 
உன் தூண்டிலில் சிக்கிக்கொள்ளும் 
மீனாகத் தவிப்பதற்கு....

- மு.முகமது பாட்சா*
04/05/2019

No comments:

Post a Comment

Popular Posts