
ஒருவரையொருவர்
கை குலுக்கிக் கொண்டார்கள்...
கைகளில் வாசம்
இடம் மாறி அமர்ந்திருந்தது..
புன்னகைக்குத்தான் தெரியும்
அழுகையை மறைப்பது
எவ்வளவு கடினமென்று...
நெஞ்சாம் கூட்டிற்குள் இருட்டு
சம்மணம் போட்டமர்ந்திருக்கும் போது
வாழ்த்துப்பா பாடுவது
மாபெரும் வலி...
நீயென்ற நானை, நானென்ற நீயை
பிய்த்தெறிதல்
அத்துணையொன்றும் சுலபமல்ல...
காமம் தொட்ட தேகம்
காலம் தொட்டும் நகரும் போது
காதல் சுவாசிக்கிறது...
போய்வா என்ற வார்த்தையில்
போகாதே என்பது மறைபொருள்...
கண்களுக்கு மட்டுமே
பொய் பேசத் தெரிவதில்லை...
கட்டியணைத்துப் பிரியும் போது
இரண்டு சவங்கள்
எதிரெதிர் திசைகளில் நடந்து போகின்றன.
- மு.முகமது பாட்சா*
02/05/2019
No comments:
Post a Comment