Thursday, 9 May 2019

நான் பக்கீர் - ரமலான் 4

நான் பக்கீர் (ரமலான்4)
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், அமர்ந்துள்ளார்
'மரணம் என்பது எவ்வளவு அழகானது... 
விடுதலையைக் கொண்டாடாமல் 
ஏன் அழுது தீர்க்கிறீர்கள்? 
உரியவன் விடுப்பு அளிக்கும் வரை 
கைதிகளாய் இருப்பதும் சுவனம்தான்... ''
துல்கர்னைன் 
தனது தோழனின் கைகளைப் பற்றிக் கொள்கிறான்.. 
'உலகம் வசமானதென்பது உன் வசனம் 
விவசாயி என்பதால் 
மண் அவனை விழுங்காமல் விடுவதில்லை 
இறுகும் வரைதான் கல் 
இளகிவிட்டால் அதுவும் சகதிதான்... 
ஆற்றலென்பது என்பது இறைவன் கொடுத்த இல்ம் 
நான் என்பது வெறும் கிரீடம். 
உலகத்தை வென்றவனை 
ஒரு கொதுவும் சாகடிக்கும் என்பது இயற்கை... 
விடை பெறுகிறேன் நண்பா 
எனக்கும் ஓராசை இறுதியில் தொக்கி நிற்கிறது... 
சந்தூக்கின் வெளியே 
இருகரங்களையும் தொங்கவிடுங்கள் 
இந்தச் சிக்கந்தர் ஆலம்பனா இல்லை 
வெறும் பக்கீர்தான் என்று 
எல்லோரும் கொண்டாடட்டும்.'

- மு.முகமது பாட்சா*
09/05/2019

(இல்ம் - அறிவு, சந்தூக் - சவப்பெட்டி, 
ஆலம்பனா-அரசன், பக்கீர் - வறியவன்)

No comments:

Post a Comment

Popular Posts