முதல் கொலை (ரமலான்3)

காபிலின் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன
ஹாபில் உறங்குவது போலவே இறந்து கிடக்கிறான்
மனதின் தூரத்தில் நின்று இக்லிமா அழுகிறாள்
முதல் கொலையென்பது அத்துணைச் சுலபமல்ல
மண்டைக்குள் நுழைந்த
சாத்தானுடன் முதலில் யுத்தம் புரிய வேண்டும்...
அவன் தலையைத் தடவித் தங்கச் சொற்களை வீசுவான்
ஆசைக் கசனாவில் அத்துணையும் நிறைத்துக் கொள்ளவேண்டும்
பின்னர் அவனே கையைப் பிடித்துக் கொலையைக் கற்றுக் கொடுப்பான்.
உதிரத்தின் வாசனை நிறைத்திருக்கும் போது
பிணத்தின் வாசனையோடு நழுவியிருப்பான்..
இறைவனின் முகம் இப்போது இருக்கமாக இருக்கும்
நீ தேடுமிடம் உனக்கே தெரியாது...
பாவத்தின் கறை அழுகலின் நாற்றம்...
காபில் ஓடிக் கொண்டிருக்கிறான்
சாத்தானின் சிரிப்புச் சப்தம் எட்டுத் திக்குகளில்.
- மு.முகமது பாட்சா*
08/05/2019

No comments:
Post a Comment