சுவனத்தின் கருவறை - ரமலான் 6

மரணத்தின் வாசல் வரை சென்று
மகிழ்வுடன் திரும்பியவள் அம்மா...
பத்து மாதங்கள்
நீயிருந்தவிடம் சுவனம்...
முப்பது மாதங்கள்
முலையில்தான் உயிரூட்டுகிறாள்...
பத்தியம் என்பது
அவள் உன் மீது வைத்த பாசம்...
பகலில் பிரகாசிக்கும் நிலவு அவள்...
'அடையாத கடன்கள் - உன்
அன்னையிடம் மட்டுமே இருக்கிறது'
சொல்வது நபிகள் நாயகம்
'சுவனத்தின் கருவறையே
தாயின் காலடி' என்றவரும் அவர்தான்...
'ச்சீய்' என்று மொழிந்து விடாதே
நரகத்தின் வாசற்கதவு தட்டும்' என்கிறார்
'தாயின் முதுமை
உன் சுவனத்திற்கான ஏற்பாடு'
சொல்பவன் இறைவன்...
உன் கருவறையைக் காயாமல் பார்த்துக் கொள்
கருணையின் ஈரம்
உன் மீது எப்போதும் இருக்கும்.
- மு.முகமது பாட்சா*
12/05/2019

மரணத்தின் வாசல் வரை சென்று
மகிழ்வுடன் திரும்பியவள் அம்மா...
பத்து மாதங்கள்
நீயிருந்தவிடம் சுவனம்...
முப்பது மாதங்கள்
முலையில்தான் உயிரூட்டுகிறாள்...
பத்தியம் என்பது
அவள் உன் மீது வைத்த பாசம்...
பகலில் பிரகாசிக்கும் நிலவு அவள்...
'அடையாத கடன்கள் - உன்
அன்னையிடம் மட்டுமே இருக்கிறது'
சொல்வது நபிகள் நாயகம்
'சுவனத்தின் கருவறையே
தாயின் காலடி' என்றவரும் அவர்தான்...
'ச்சீய்' என்று மொழிந்து விடாதே
நரகத்தின் வாசற்கதவு தட்டும்' என்கிறார்
'தாயின் முதுமை
உன் சுவனத்திற்கான ஏற்பாடு'
சொல்பவன் இறைவன்...
உன் கருவறையைக் காயாமல் பார்த்துக் கொள்
கருணையின் ஈரம்
உன் மீது எப்போதும் இருக்கும்.
- மு.முகமது பாட்சா*
12/05/2019
No comments:
Post a Comment