
எல்லோரையும் போல்தான்
அந்தச் செய்தியைப் படித்துவிட்டு
நகன்றுவிட்டேன்...
அதற்குள்ளிருந்த புழுக்கம்
மெல்லக் காற்றில் விரவுகிறது...
ஆங்காங்கே தீப்பற்றி எரிகின்றன...
ஒருவரையொருவர்
அடித்துக் கொள்கிறார்கள்...
ஆபாச வார்த்தைகளாய் இணையம் துப்ப
நகரம் எச்சிலாகிறது...
விவாதங்கள்
தீக்குச்சிகளை உரசிப்போட
நாலைந்து பேர் கருகிக் கிடக்கிறார்கள்...
செய்திகள்
செய்திகளாகவே இருந்தாலும்
வாசிப்பவனின்
கண்களில் நிறம் கூட்டிக் கொள்கிறது...
- மு.முகமது பாட்சா*
03/06/2019
No comments:
Post a Comment