
நிதானம் சுவையற்று
நிர்மூலம் நோக்கிப் போகின்றான்...
நிழல் பேயாக விரட்டித் திரிகிறது...
ஆசைப் புதைமணலில்
அழுக்குகளின் சோடினை...
சொல்லோடு திரியும் தேசாந்திரிகளுக்குச்
சோடியம் விளக்குகள் தேவையில்லை...
கைகால்கள் அற்புத எந்திரம்...
கட்டாந்தரையும் கனகப் பஞ்சணைகள்...
நிம்மதியான உறக்கம் நித்தம் சுவர்க்கம்...
குடிக்கும் கஞ்சியாற்றும் தீராச் சோகம்...
வெற்றிடம் நிரம்பவேண்டாம்...
நிம்மதியென்றும் ஆசைகள்மீது நடக்காது.
அழுகியப் பிணத்தினருகே
ஆராதனைத் தட்டு மணக்கவாச் செய்யும்?
ஆலயத்தில் மட்டும்
இறைவன் என்பதும் நாத்திகம்...
மனசே பேராலயம்...
வகுளம் என்பதே நிழல்தரு வனம்.
- மு.முகமது பாட்சா*
03/05/2019
No comments:
Post a Comment