நான் கடவுள் (ரமலான்2)

அதிகாரத்தை வார்த்தைகளால் எழுப்பி
பிரமிடுகள் அமைக்கிறான்.
நைல் நதி அவனது கைப்பட்டோடுவதாக
வரலாறு புனையப்படுகிறது...
கடவுளாகவே கற்சிற்பங்களில்
பதுங்கிக் கொண்டான் ....
பஞ்சணைகள் நிறைத்த அழகிகள்
கடவுளைப் புணர்ந்ததாகக்
கற்பிதம் எழுதுகிறார்கள்...
தூதுவன் மூஸாவின் ஆசாக்கோல்
கர்பகிரகத்தையே தட்டியெழுப்ப..
கடவுளுக்கேன் கெட்ட சொப்பனங்கள்?
நான் கடவுள் என்ற மெல்லிசை
அபஸ்வர கிணற்றில் அபயம் தேடுகிறது,
வெட்டுக்கிளிகள்
தேசத்தைக் கிள்ளியெறிகின்றன...
ஒற்றை விரலும் உதவிக்கு வராமல்
பெரும் உதிரத்தை சுமந்தோடும் நதி
கடவுளுக்கே தாகத்தைக் கூட்ட...
மூட நம்பிக்கைகள் மெல்ல உதிர்கின்றன...
நான் கடவுள் என்றவன்
நானை வீசிவிட்டு கடவுளைக்
கழற்றவிடாமல் பார்த்துக் கொள்கிறான்...
அழுக்குகள்
ஆதியைத் தொழாமல் மீள்வது கிடையாது..
சிலைகள் சிதறும் போது
கடவுளின் கோபம் குதிரை மீதேறி விரட்ட
பிளந்த நதியில் செருக்காய் நுழைந்தவன்
மூடிய அலைகளுக்குள் மூழ்கிடும் முன்பாக
இறந்தவன் கடவுள் இல்லையென்ற
இறைவசனம் நெருக்கமாகிறது...
மன்னன் பிர்அவுனின்
இறுதி மூச்சின் மிச்சத் துளிகளில்
மெல்ல எழும்புகின்றன நுரைகளோடு
நான் கடவுள் என்ற அழுக்குகள்..
- மு.முகமது பாட்சா*
07/05/2019
படம்: பிர்அவுனின் முகம்தாங்கிய பிரமிடு

அதிகாரத்தை வார்த்தைகளால் எழுப்பி
பிரமிடுகள் அமைக்கிறான்.
நைல் நதி அவனது கைப்பட்டோடுவதாக
வரலாறு புனையப்படுகிறது...
கடவுளாகவே கற்சிற்பங்களில்
பதுங்கிக் கொண்டான் ....
பஞ்சணைகள் நிறைத்த அழகிகள்
கடவுளைப் புணர்ந்ததாகக்
கற்பிதம் எழுதுகிறார்கள்...
தூதுவன் மூஸாவின் ஆசாக்கோல்
கர்பகிரகத்தையே தட்டியெழுப்ப..
கடவுளுக்கேன் கெட்ட சொப்பனங்கள்?
நான் கடவுள் என்ற மெல்லிசை
அபஸ்வர கிணற்றில் அபயம் தேடுகிறது,
வெட்டுக்கிளிகள்
தேசத்தைக் கிள்ளியெறிகின்றன...
ஒற்றை விரலும் உதவிக்கு வராமல்
பெரும் உதிரத்தை சுமந்தோடும் நதி
கடவுளுக்கே தாகத்தைக் கூட்ட...
மூட நம்பிக்கைகள் மெல்ல உதிர்கின்றன...
நான் கடவுள் என்றவன்
நானை வீசிவிட்டு கடவுளைக்
கழற்றவிடாமல் பார்த்துக் கொள்கிறான்...
அழுக்குகள்
ஆதியைத் தொழாமல் மீள்வது கிடையாது..
சிலைகள் சிதறும் போது
கடவுளின் கோபம் குதிரை மீதேறி விரட்ட
பிளந்த நதியில் செருக்காய் நுழைந்தவன்
மூடிய அலைகளுக்குள் மூழ்கிடும் முன்பாக
இறந்தவன் கடவுள் இல்லையென்ற
இறைவசனம் நெருக்கமாகிறது...
மன்னன் பிர்அவுனின்
இறுதி மூச்சின் மிச்சத் துளிகளில்
மெல்ல எழும்புகின்றன நுரைகளோடு
நான் கடவுள் என்ற அழுக்குகள்..
- மு.முகமது பாட்சா*
07/05/2019
படம்: பிர்அவுனின் முகம்தாங்கிய பிரமிடு
No comments:
Post a Comment