Sunday, 5 May 2019

ஆடுகளைக் காணவில்லை


அவன் இப்போதுதான் 
முதன் முறையாகக் கவிதையொன்றை 
எழுதுவதாகச் சொன்னான்... 
கண்களை நம்பமுடியவில்லை 
நல்ல சித்திரகாரனாக இருந்தான் 
ஆடுகளை வரைந்தவன் 
மரங்களை வரையாமல் 
மேகங்களைத் துறட்டிக் கோலால் 
இழுத்துக் கொண்டிருந்தான்... 
ஓநாயொன்று 
காலருகே நின்று கொண்டிருந்தது... 
நிழலில்லாத அந்தப் படம் 
உச்சி வெயிலைச் சித்தரித்திருக்கலாம் 
இறுதியாக அவனது கண்களைத் 
தரையில் சிதறவிட்டவன்... 
அதனை 
ஒரு காகம் கொத்திக் கொண்டிருப்பதாக 
முடித்திருந்தான்... 
அவன் குருடனா? எனக் கேட்டேன் 
ஆடுகளைக் காணவில்லையென்று 
ஓடிக் கொண்டிருந்தான்.

- மு.முகமது பாட்சா*
04/05/2019

No comments:

Post a Comment

Popular Posts