Tuesday, 7 May 2019

நிழலோடு விளையாடு

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
நிழலென்பது நிழலாக இருக்கும் வரை 
பிரச்சனையில்லை 
நீளும் போது
பயமாகத்தான் இருக்கிறது... 
சன்னலுக்குள் நுழையும் நிழலுக்கு 
வெளிச்சத்துடன் உடன் படிக்கை 
நீருக்கு நிழலிருக்கிறதா 
என்பது விவாதம் 
நீருக்குள் நிழலிருக்கிறது 
என்பது நிதர்சனம். 
நிழலைப் 
பிடித்து விளையாடுகின்றன குழந்தைகள் 
நிழல் 
நிழலையே பிடித்து விளையாடுகின்றது. 
பூமிக்குக் குடை பிடிக்கின்றன 
நிழல்கள் 
நன்றியென்பதும் நிழல்தான். 

-மு.முகமது பாட்சா*
07/05/2019

No comments:

Post a Comment

Popular Posts