
எல்லாம் சரியாக இருக்கிறது
என்பது முட்டாள்தனம்.
யாரிடம்
சண்டையிட்டுக் கொண்டிருக்கிறாய்?
யாருக்காகவோ கவலைப் படுகிறாய்!
பறவைகளாகப் பறக்க எத்தனித்தாலும்
பூனைகளோடுதான் பதுங்கிக் கொள்கிறோம்...
எலிகள் நம்மை விரட்டுகின்றன...
கண்களை மூடித் திறந்தால்
விடியும் என்பது நிஜம்... ஆனாலும்
சந்தூக்கின் வாசனை
கபர்ஸ்தான்களை நிரப்பாமலில்லை.
பஞ்சணையில் பாசத்தை வைத்துவிட்டு
முஸல்லாவில் தஸ்பீகள் உருள்கின்றன...
கண்ணீர் மட்டுமே
கவலைகளைக் கழுவி விடாது...
உள்ளம் இருட்டாக இருந்தால்
வெளிச்சம் சன்னலை எப்படித் திறக்கும்?
காற்று வரட்டும்.
கழற்றி வையுங்கள் அழுக்காடைகளை.
- மு.முகமது பாட்சா*
05/05/2019
No comments:
Post a Comment