Sunday, 5 November 2017

புலம்பல் - 3

புலம்பல்:(3)

தானியங்கு மாற்று உரை இல்லை.

கான்வெண்ட்டு படிப்பு
படிக்கணம்னு...
நகைகளை வித்து படிக்க வச்சேன்!
காலேசு படிப்பு 
படிக்கணம்னு...
கழனியை வித்து படிக்க வச்சேன்!
வேலைக்கு போயி
பொழைக்கணம்னு...
வீட்டை வித்தும் படிக்க வச்சேன்!
மக்கா...
எல்லாம் வித்து படிக்க வச்சும்
கையில நாலு காசு மிச்சமில்ல...
பையன், மண்டையிலும், 
ஒண்ணும் ஏற வில்லை ....
இத நான்
எங்க போயி சொல்லுவேன்
மக்கா
இத நான் 
எங்கப் போயிச் சொல்லுவேன்!

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts