Wednesday, 15 November 2017

சொல்லாத வார்த்தைகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

சொல்லாத வார்த்தைகளுக்குள் 
இல்லாத பொருளொன்று உட்கார்ந்திருக்கிறது 
அது காற்றைப் பிடித்து ஊர்கோலம் போக 
வார்த்தைகள் விழுந்த இடத்தில் 
வனமொன்று விளைந்து நிற்கிறது 
மரங்களின் உரசலில் பற்றியெரியும் தீயை 
யார் அணைக்கப் போகிறார்கள்? 
சொல்லாத வார்த்தைகளைத் தேடிப்பிடித்து 
வடிவமைத்து வால் வைத்தவர்கள் 
வனத்திற்குள் நுழையவிட்டால் 
பற்றியெரியும் தீயை 
அது பவ்வியமாகக் கொண்டு வருகிறது 
சுற்றியெரியும் நெருப்பில் உட்கார்ந்து கொண்டு 
சொல்லாத வார்த்தைகளுக்குச் சாபமிட்டால் 
இல்லாத பொருளுக்கு 
என்னதான் வந்து விடப் போகிறது? 

- மு.முகமது பாட்சா* 

No comments:

Post a Comment

Popular Posts