
சிங்கத்தின் மேல்
படுத்துறங்கும் மனிதர்கள்!
-புலியின் மீது
புரண்டு விளையாடும்
குழந்தைகள்!
-அன்பை விதைத்து
அன்பை அறுவடைச் செய்து...
"ச்சேய்!...என்ன மக்கள்?"
சாமிகளோ,
சாதிகளோ தெரியவில்லை!
-தனி தனி வீடுகள்
யாருக்கு மில்லை? !
-தொழவு மில்லை? !
கும்பிடவு மில்லை? !
-இப்படியே விட்டால்
இனி சரி வராது!
'குழப்பத்தை விதைத்து
குருதிகள் காண வேண்டும்!'
-துப்பாக்கியில் சுட்டால்
தோட்டாக்கள்
துளைக்கவில்லை!
-கத்தியால் வெட்டினால்
காயமே யில்லை!
-அடித்தாலும், அவர்களுக்கு,
வலிக்கவே யில்லை!
-பிறகுதான் தெரிந்தது
இவர்கள் உலகத்தில்
செயற்கை மரணமே
இல்லை !
......"ச்சேய்! இதுவென்ன உலகம்?!".....
விண் கலத்தை
விரைந்து கிளப்பினோம்
'பூமிதான் நமக்கு சரி!'
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment