
சிறகுகளுக்குள் எறும்புகள்
புற்றுக் கட்டியிருக்கின்றன
பறக்க எத்தனிக்கையில்
இறகுகள் உதிர்ந்து வீழ்கின்றது,
வானம் தொலைவில் நகர்ந்து போக
மூச்சிறைக்கும் காற்றில்
முடங்கிக் கிடக்கிறது அப் பறவை,
ஜீவசகாப்தத்தின் முடிவுரையில்
முனகல் சப்தம்
முற்றுப் புள்ளியாய் வந்துவிழ
காப்பளித்த மரத்தின் கண்ணீர்
வேர்களில் வழிகிறது
ஊற்று நீரென்று வியக்காதீர்கள்
அதுவும் உப்பு நீர்தான்.
-மு. முகமது பாட்சா*
No comments:
Post a Comment