
குற்றவாளி கூண்டில்
நிற்க வைக்கப் பட்ட உண்மைகள் ,
தலை குனிந்து நின்றன.
பொய்கள்
கருப்பு அங்கிகளை அணிந்திருந்தது
,
நீதி தேவனின் இரண்டு கண்களிலும்
சீழ் வடிந்து கொண்டிருக்க ,
நீதி தேவதை
தன்னைத் தானே சிதைத்துக் கொண்டிருந்தாள் !
குற்றப் பத்திரிக்கைகளை வாசிக்க,
யாருக்குமே நேரமில்லை !
அத்தனை தாள்களுமே , அவசரத்தில்
எழுதப் படாமல் இருந்தன .
உண்மைக்காக வாதாட
யாருமே வரவில்லை
தீர்ப்புகள்
அவசரமாய் வாசிக்கப் படுகின்றன ,
உண்மைகளின்
மூன்று புலன்களுக்கும்
மூடி முத்திரை வைக்க வேண்டுமென்று .
நீதி தேவனின் எழுதுகோல்
உடைக்கப் படுகின்றது ,
தீர்ப்பின் மையில்
உண்மைகளின் இரத்த மாதிரிகள் !
- மு.முகமது பாட்சா*
No comments:
Post a Comment