
கட்டம் கட்டி ஆடுகின்ற
இந்த ஆட்டம்,
சதுரங்கமும் இல்லை,
பரமபதமும் இல்லை,
தாயமாக இருக்குமோ!
என்று கேட்டேன்
தாயக்கட்டையே
இல்லையென்றார்கள்,
காய்கள் மட்டும்
நகர்த்தப் படுகின்றது,
நகர்த்தப் பட்ட இடத்தில்
தூமை நாற்றத்துடன்
தூதிகள் முளைக்கின்றன,
நகர்த்தும்
விரல்களின் நகங்களில்
சதைக் கூழ்கள்
அண்ணாந்து பார்க்கிறேன்
அரசனென்று
சொல்லிக் கொண்டவன்
இராட்சசனாக
மாறி நிற்கிறான் ,
பிணங்களின் மேல்
ஆட்சி செய்வதும்
பெருமிதம்தான்
என்று சொல்கின்றன
அவனது சிவந்த கண்கள் !
- மு.முகமது பாட்சா
09/11/2016
ஓவியம்: முகமது பாட்சா
No comments:
Post a Comment