
பொய்களை
விற்றுச் செல்லும் வியாபாரியிடம்,
விலை என்னவென்று கேட்டேன்,
தேவைக்கு இலவசம் என்றான்,
அளந்து கொடுப்பாயா?
எடை போட்டு தருவாயா ? என்றேன்
அவிழ்த்து விடுவேன்
பிடித்துக் கொள் என்றான்
சம்மதித்தேன்
அவிழ்த்தவுடன், பட்டாம் பூச்சிகள் பறந்து வந்தன !
பட்டாம் பூச்சிகளின் கால்களில்
யானை குட்டிகள் !
யானை குட்டிகள் ஒவ்வொன்றும்
ஒரு தென்னை மரத்தைத் தும்பிக்கையில் பிடித்திருக்க ,
தென்னை மரத்திலேறி ஒருவன்
தேங்காய்களைப் பறித்து போடுகின்றான்,
தேங்காய்களை யெல்லாம்
எறும்புகள் தூக்கிச் செல்ல,
எழுப்பிவிட்டாள் என் அம்மா,
கறுப்புப் பணத்தை ஒழிக்க
500 ,1000 ம் செல்லாதென்று மோடி அறிவித்ததாக
செய்திகள் ஓடிக் கொண்டிருந்தன !
- முகமது பாட்சா* 15/11/2016
No comments:
Post a Comment