
புலம்பல்.(5)
.
வீடெல்லாம் தண்ணீ பூந்து
கடல் போலாச்சி மக்கா
வைச்சிருந்த ஒத்த மாடும்
நீருக்குள்ளே அடிச்சி போச்சி
பரண் மேல் பூனை மட்டும்
எனக்கு துணையாகிப் போச்சி
மக்கா
ஓட்டு கேட்ட மகராசன்
பொண்டாட்டி
சூட்டைவிட்டு வரலயே....
மக்கா
யாருகிட்டே சொல்லுவேன்
இதை, நான்
யாருகிட்டே சொல்லுவேன்!
.- மு.முகமதுபாட்சா
No comments:
Post a Comment