Thursday, 9 November 2017

பாதங்களால் நிறையும் வீடு

empty house painting க்கான பட முடிவு

பாதங்கள் நிறையாத வீடுகளில் 
தனிமை வந்து உட்கார்ந்து கொள்கிறது, 

வாசல் கதவுகளை மூடி வைக்காதீர்கள் 
வருவது வசந்தமாகவும் இருக்கலாம், 

தொலைக்காட்சிப் பெட்டிகளில் கண்களையும் 
செல்பேசிகளில் காதுகளையும் கொடுத்துவிட்டு 
நடக்கின்ற கால்களை 
நறுக்கிவிட்டு உட்கார்ந்திருக்கிறோம், 

உறவுகளின் சங்கிலிகள் 
துருப் பிடித்துத் தொங்குகின்றன.... 
அறுந்து விழுந்த சங்கிலிகளை 
யாரும் கண்டு கொள்வதேயில்லை, 

வீடுகளெல்லாம் பாதங்களையிழந்த 
அநாதிகளாகவே அழுகின்றன, 

ஸ்டிக்கர் ஒட்டிய பாதங்களால் 
கிருஷ்ணனின் ஜெயந்தி சிறப்பாக நடக்கிறது, 

பாதங்களால் நிறைந்த வீடுகளை 
இனியாவது பத்திரப்படுத்தி வையுங்கள்,

இல்லையென்றால் 
அவை காட்சிப் பொருள்களாகக் கூட 
நம் கண்களில் தென்படாது.

               **** 
-  மு.முகமது பாட்சா


No comments:

Post a Comment

Popular Posts