
கவிக்கோ அப்துல் ரஹ்மான்
-------------------------------------
கவிதைகளுக்குள் நுழைந்த
கவிதை நீ !
வார்த்தைகளுக்குள் விளையாடும்
செப்படி வித்தைக்காரன் ,
கருத்துகளின் மேல்
கட்டடம் எழுப்பத் தெரிந்தவன்,
புன்னகைக்குள் அறிவை
புதைத்து வைத்திருப்பவன் ,
பூக்களைப் புதையல்களாக
மாற்றத் தெரிந்தவன்,
நீ எழுதும் எழுத்துகளைச் சுவாசித்து
எத்தனையோ பறவைகள் பறக்கின்றன,
நீயே வானமாக இருக்கிறாய்,
நீயே வனமாகவும் இருக்கிறாய்,
வசந்தமாக நாங்கள் பறக்கிறோம்,
பத்தெட்டை
அழகாக படிதாண்டி வந்துவிட்டாய்
மிச்சம் இருபத்தை
எளிதில் நீ கடந்திடுவாய்,
அடுத்தடுத்த
சொச்சம் பத்துகளுக்கும்
சொந்தக்காரனாகவே இரு,
சொல்லித்தர எம் சந்ததிக்கும்
ஆசான் தேவை !
நட்புடன்.....முகமதுபாட்சா*
( சென்ற ஆண்டு கவிக்கோ பிறந்த நாளன்று
எழுதியக் கவிதை. அவரே ஒரு வாழும் கவிதைதான்
அவருக்கே சமர்ப்பணம் )
No comments:
Post a Comment