Friday, 13 April 2018

சாத்துவிகம் சரியா?

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், கூட்டம்

எமெக்கென்று ஒரு தேசமுமில்லை 
எமெக்கென்றொரு ஊருமில்லை! 
குடிக்கின்ற நீரிலிமொரு 
தடுக்கின்ற மதமுமிருந்தால் 
எமெக்கென்று ஒரு தேசமுமில்லை... 
எமெக்கென்றொரு ஊருமில்லை! 
விலங்கினினும் கேடாக 
திரிந்திடும் பிறவியென்று 
சாத்திரம் வசையும் சொன்னால் 
எமெக்கென்று ஒரு தேசமுமில்லை! 
எமெக்கென்றொரு ஊருமில்லை! 
தீண்டாமைத் தீயின் ஊற்றில் 
எரிகின்ற சாதிகளா நாங்கள்? 
சாகாமல் சாகின்றோமே...உத்தமனே! 
சாத்துவிகம் சரியென்றாகுமா? 

(மேதை. அம்பேத்கர், தங்களின் சமுகத்தின் 
கொடுமையான நிலையை 
காந்திகளிடம் பகிர்ந்த வேதனை வார்த்தைகளை 
கவிதையாய் மாற்றியுள்ளேன்) 
-
- மு. முகமது பாட்சா*
14/04/2016

No comments:

Post a Comment

Popular Posts