Friday, 20 April 2018

திக்ருகளின் ஹூ

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

சூஃபியின் புல்லாங்குழலிசை 
சுயம் மறந்து சுற்றுகிறது
திக்ருகளின் ஹூ 
மூன்றாம் பால்வெளியில் கடக்க
கோடியின் பெருக்கத்தில் 
விண்மீன்கள் சுழல்கின்றன
ஆசை நிரம்பிவழியும் கோப்பையில்
எத்துணை ஈக்கள் 
பெருங் காற்றின் வெளியிடை
சுற்றித்திரிகிறது வெற்றுத் தேகம்
அதிரசமுண்டவன் 
அடக்கவிடத்தில் புழுக்களின் தீனி...
ஒட்டகத்தின் பசி முட்களை அறிவதில்லை
நேசியை வாசிக்காதவன்
நித்திரையில் தினந்தினம் யாசிக்கிறான்
பசியைப் பார்த்து பயந்தவன்
பசியோடுவே சாகிறான்...
தேசாந்திரியின் இசை 
தேடுதலில் மட்டுமே தொலைந்து போக
இறந்து போன காகத்தினருகில்
ஒரு பூ விழுந்து கிடக்கிறது....
யாருக்காக அழுகிறது இத்துணைக் காகங்கள்?

- மு.முகமது பாட்சா*
20 /04 /2018

No comments:

Post a Comment

Popular Posts