Wednesday, 25 April 2018

இன்ஷா அல்லாஹ்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், புன்னகை, புல் மற்றும் வெளிப்புறம்

ஓநாய் பார்வைகள் ஒளிந்திருக்கின்றன
ஓடிடாதே என் ஆட்டுக்குட்டி
இன்ஷா அல்லாஹ் அவை சிதைந்துவிடும்

வேலி போட்டவன் பயிரை வளர்த்தவன்
மேய்ந்திடாதே ஆட்டுக்குட்டி
இன்ஷா அல்லாஹ் புல் எங்கும் இருக்கும்

கருவை முள்ளும் கருணை கொடுக்கும்
கலங்கிடாதே ஆட்டுக்குட்டி
இன்ஷா அல்லாஹ் எதிர்காலம் இருக்கும்

இங்கு நிழலைத்தானே நிழல் மேய்கிறது
எங்கே போனாய்  ஆட்டுக்குட்டி
இன்ஷா அல்லாஹ் விரைவில் கிடைப்பாய்

நம்பிக்கைதானே இன்ஷா அல்லாஹ்
நானும் காத்திருக்கிறேன் நீயும் விரைந்து வா.

- மு.முகமது பாட்சா*
26 /04 /2018


No comments:

Post a Comment

Popular Posts