Monday, 16 April 2018

அறுக்கக்கூடாத பிணம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் பலர் அமர்ந்துள்ளனர்

ஒரு மௌனத்தை அறுவை சிகிச்சை 
செய்து கொண்டிருந்தார்கள்
அதனுள்ளிருந்து 
சில பட்டாம் பூச்சிகள் பறந்து சென்றன
சில மழைத்துளிகள்
குளுமைக் கட்டிகளாக உறைந்திருக்க
காமத்தின் பிசுபிசுப்பு
ஆங்காங்கே வழிந்து கொண்டிருந்தது
உறக்கம் தொலைத்த இரவுகள்
பச்சைப் பாசிகளாக கட்டியிருந்தன
மரமொன்று வளர்ந்து
விழுதுகளை வேர் விட்டிருந்தது
தபயோகியின் தரிசனமாக
குரங்கொன்று அழுகி இறந்து கிடக்க
பாம்பொன்று நெளிந்து நகர்ந்தது
பூனையின் கண்கள் வெறித்துக் கிடக்கின்றன
சாக்கடைப் புழுக்களெல்லாம் 
சரசரவென்று வெளியேறத் தொடங்க
அங்கிருந்த நகர்ந்த மருத்துவர்கள்
எழுதி வைத்த அந்த  ஆய்வு குறிப்பு
'மௌனம் என்பது  
எப்போதுமே அறுக்கக் கூடாத பிணம்' 
என்றே எழுதியிருந்தது.

- மு.முகமது பாட்சா*
17 /04 /2018

No comments:

Post a Comment

Popular Posts