
எனக்கு உன்னைத் தெரியும்
என்பது
உனக்குத் தெரியுமா?
உன் வீட்டு வாசலின்
கோலங்களைக் கேட்டுப் பார்
என் வருகையைப் பற்றிச் சொல்லும்!
நிலவுக்கு மட்டுமே தெரிந்த விசயம்
உன்னைப் பற்றி
நான் பாடியக் கவிதைகள்!
உன் நிழலைத் தொட்டு நகர்ந்திருக்கிறது
என்னுடய நீண்ட நிழல்கள்!
ஆ
...னா
........லு
............ம்
உனக்குத் தெரிய வாய்ப்பே யில்லை
என்னைப் பற்றிய தகவல் !
- மு.முகமது பாட்சா*
05/04/2016
No comments:
Post a Comment