Monday, 9 April 2018

மர்க்கடம் மனசு

தானியங்கு மாற்று உரை இல்லை.

மர்க்கடம்  போல் 
நிலையின்றித் தாவும் மனதில் 
கர்க்கடம் பிடியாய்ப் பிடித்து 
மனதிற்குள் எப்படி நுழைந்தாய்? 
மர்த்தியம் முழுதும் நானே 
நினைவுகள் சுமந்து  
மகிழ்விலே சுற்றித் திரிந்ததாலே 
கர்த்தபம் போல்தான் இன்று 
களைத்துவே நிற்கின்றேன்... 
யக்கேசன் யானும் இல்லை 
கா 
....த 
.......லை 
சீக்கிரம் சொல்லி விடு 
நக்கரம் பிடித்த களிறாய் 
நித்தமும் தவிக்கின்றேன் யான். 

- முகமது பாட்சா*
09/04/2016

மர்க்கடம் - குரங்கு, கர்க்கடம் - நண்டு, 
மர்த்தியம் - பூமி, கர்த்தபம் - கழுதை,
யக்கேசன் - குபேரன், நக்கரம் - முதலை

No comments:

Post a Comment

Popular Posts