
சிலைகளுக்குள் சிக்கிக் கொண்ட
பாபா சாகெப் அம்பேத்கரை
எப்படித்தான் மீட்கப் போகிறோம்?
அடிமை விலங்கை அகற்றிவிட்டுப் போவது
அத்துணை சுலபமாகத் தெரியவில்லை,
வீதிக்கொரு சிலையை வைத்துவிட்டு
சாதிக்கொரு சங்கம் வைத்து திரிகின்றோம்,
வீட்டுக்கொரு அம்பேத்கரை
யாராவது விதைத்தோமா?
பாடப் புத்தங்களில் தொலைத்த மனிதரை
வீட்டில்வைத்து படிக்க யார் தடை போட்டது?
பிறந்த நாளில் மட்டும்
மாப்பிள்ளையாகி விடுகிறார் பாபா சாகெப்
சட்டமியற்றியவரை
சட்டத்துக்குள்
அடைத்து வைத்திருக்கிறது சமூகம்
ஏனென்றால் அவர் இன்னமும் ஒரு தலித்
- மு.முகமது பாட்சா*
14/04/2017
No comments:
Post a Comment