
கனவு பெருவெளியின் காற்று
நிசாந்தம் நிலையில்லா பிறப்பு
கூடுகள் கலையக்கூடியது
நூக்கம் பறவையின் சிறகு மொழி
அகலிடத்தின் அகலம் நொச்சியாம்
அனிகம் அனாயாச கௌரவம்
நீதியின் மறு பெயர் நிழலி
நிடூதனம் வார்த்தைகளின் சாயை
சாகரம் அல்லலுறும் மனசு
சத்தியம் சந்தர்ப்பத்தின் முகமூடி
மூகன் மூச்சனின் வாள்
முகவரி முகமேயில்லாத பிம்பம்
யாப்பு கவிதைகளின் அணி
யாக்கை யாப்பில்லாத கவிதை
கனவு பெருவெளியின் காற்று.
- மு.முகமது பாட்சா*
23 /04 /2018
No comments:
Post a Comment