
இந்தப் பிரபஞ்சம் சில எழுத்துகளால்
என்னிடம் வந்துவிடுகிறது
வார்த்தைகளுக்கு
புனுகுப் பூசி உலாவ விடுகிறேன்...
இரவல் வாங்கிய இலக்கியம்
நகலெடுத்து வானத்தில் பறக்கிறது...
விட்டெறிந்த காசுகள்
விருதுகளாக வந்து குவிகின்றன...
திரைப்படத்திலொரு பாடல்
அல்லது வசனம் போதும்
அறிவு ஜீவிகள்
அழகாக முளைத்து விடுகிறோம்,
காப்பியம் எழுதுபவன் என்றும்
கைதட்டல்களுக்கு அலைவதில்லை
கைதட்டல்களே இல்லையென்றால்
நாங்களெல்லாம்
அறிவான ஜீவிகளேயில்லை.
- மு.முகமது பாட்சா*
28 /04 /2018
No comments:
Post a Comment