Thursday, 5 April 2018

கைகளில் மட்டும் தஸ்பீ

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

நானெழுதாத வார்த்தைகளை 
அப்படியே விட்டுவிட்டுச் செல்கிறேன், 
அவை கவிதைகளுக்குள் வர மறுப்பதால்... 
ஆசைகளென்னை 
கைப் பிடித்து அழைத்துச் செல்கின்றன, 
நான் மட்டும் போதிமரத்தையெழுப்பி 
அதன் கீழ் உட்கார்ந்து கொள்கிறேன், 
என்னைப் புத்தனென்று மட்டும் சொல்லிவிடாதீர்கள், 
அதன் கீழ் புதையல் கிடைத்தால் 
எடுத்துக் கொண்டோடும் ஆசாமிதான், 
கனவுகளை 
கண்களிலேயே வைத்துக் கொண்டு திரிகிறேன், 
கைகளில் மட்டும்தான் தஸ்பீமணிகள் ! 
நானெழுதாத வார்த்தைகளை 
யாராவது பூக்களாக்கி தூவக்கூடும் 
அப்போது 
நான் மட்டும்தான் உறங்கிக் கொண்டிருப்பேன், 
கல்லறைத் தோட்டத்தில் அமைதியாக 

- மு.முகமது பாட்சா*
05/04/2017

No comments:

Post a Comment

Popular Posts