Monday, 2 April 2018

கல்லானவன்

தானியங்கு மாற்று உரை இல்லை.

கற்களை உடைத்த வெடிகளுக்குத் தெரியாது
அவை எங்கெங்கு குடியமருமென்று
கல்லொன்று சிலையாகி தெய்வமாகும் வரை
காகங்கள் எச்சமிட்டிருக்கலாம்
அத்திவாரத்தில் புதைந்த கற்கள்தான்
கூரையையே காப்பாற்றுகின்றன
உளிகள் ஓய்வெடுக்கப் பறக்கும் பறவைகள்
சிற்பியின் மனசு
அக்கிரமனின் மண்டையை உடைத்தது
கோபப்பட்ட கல்லொன்றாகவே இருக்கும்
வேர்களை இறுக்கிப் பிடித்திருக்கும் கற்களுக்கு
இலைகள் சாமரம் வீசுகின்றன
என்னையும் நீ கல்லென்றுதான் சொன்னாய்
பயனறியாதவளைப் பற்றி நானென்ன பேசமுடியும்?

- மு.முகமது பாட்சா*
02/04/2018

No comments:

Post a Comment

Popular Posts