Sunday, 8 April 2018

சிரியாவின் குழந்தைகள்


படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், பலர் அமர்ந்துள்ளனர், பலர் உறங்கிக் கொண்டிருக்கின்றனர் மற்றும் குழந்தை

சிரியாவின் குழந்தைகள்
--------------------------------------------

சப்தங்களையெல்லாம் 
எங்களின் காதுகள் 
எளிதில் கடத்தி விடுகின்றன, 
குண்டுகளின் சப்த மழைக்குள் 
எங்களின் அல்லாஹூ அக்பர் 
பதுங்கிக் கொள்கிறது... 
குழிகளுக்குள்தான் 
குடும்பம் நடத்துகின்றோம், 
மண்ணை மூடிவிடுங்கள், 
கபர்குழிகள் 
தனியாகத் தேவையிருக்காது, 
இறந்து கிடக்கும் 
எங்கள் குழந்தைகளின் 
உதிரத்துளிகள் கேட்கின்றன, 
பதில் சொல்வீர்களா! 
யாருக்காக 
சண்டைப் போடுகிறீர்கள்...?

நீங்கள்
யாருக்காக
சண்டைப் போடுகிறீர்கள்...?
எங்களுக்காகவா? 
அல்லது உங்களுக்காகவா? 
அல்லாஹூவிற்காக என்று மட்டும் 
சொல்லிவிடாதீர்கள், 
நாங்களும் அவனைத்தான் 
அழுது கொண்டே தொழுகிறோம் !

 - மு.முகமது பாட்சா*

08/04/2017

No comments:

Post a Comment

Popular Posts