Thursday, 5 April 2018

ஒரு போத்தல்

தானியங்கு மாற்று உரை இல்லை.

ஒரு போத்தல் 
தண்ணீரை மறைவாகக் குடிக்கிறோம் 
கடத்தப்பட்டதுதான் 
ஒரு போத்தல் 
100 டாலரென்பதும் அதிகம்தான் 
வேறு வழி தெரியவில்லை 
ஒரு காலத்தில் ரூபாய் புழக்கம் இருந்ததாம் 
இப்போதெல்லாம் டாலரும் யூரோவும்தான் 
தண்ணீருக்காகவே ஒரு காலத்தில் 
சண்டை போட்டிருக்கிறார்கள் 
ஆச்சரியமாக இருக்கிறது 
தண்ணீரில் குளித்திருக்கிறார்கள் 
பின்புறம் கழுவியிருக்கிறார்கள் 
அப்போதெல்லாம் மக்கள் வாக்களித்து 
மன்னன் ஆட்சி செய்திருக்கிறான் 
பன்னாட்டு நிறுவனங்கள்தான் இப்போது 
நாட்டையே நிர்வாகம் செய்கிறது 
நீரின் ஆளுமை மட்டும் அமெரிக்காவிடம் 
போராட்டக் காரர்களுக்கு 
எப்போதுமே தண்ணீர் கிடைக்காது 
அதனால்தான் கடத்தி வந்திருக்கிறோம் 
இனிமேல் எங்களைத் தேடுவார்கள். 

- மு.முகமது பாட்சா* 
06 /04 /2018 

No comments:

Post a Comment

Popular Posts