
போனவன் வரவில்லை
போக்கத்த நண்பனோடு...
கூடித் திரிகிறானோ?
குடிக் கடையில் கிடக்கிறானோ?!
வாடிக் கிடக்குமென்னை
வஞ்சித்துப் போனவனை...
வாஞ்சையில் காத்திருக்கேன்
வாசலில் பிறர் பார்த்து நிற்க!
கூடி மகிழ்ந்த நாட்கள்
மனவறையில் குலவையிட...
கூத்தாடி வருவானோ...?
கூழ்வார்த்தைப் பேசியென்னை
கண்ணீரைப் பெறுவானோ?!
ஆனாலும் காத்திருக்கேன் ...
ஆம், காத்திருக்கேன்
.
காதலின் வார்த்தைக்காக!
காமத்தின் சோறுண்ட
ஆசையின் கூட்டலுக்காக!
- மு.முகமது பாட்சா*
28/04/2016
No comments:
Post a Comment