
முகூர்த்தக் கால் நட்டுவைத்து
நல் முகூர்த்தம்தான் பார்த்து வைத்தாய்
பந்தக்கால் வாழைக்கட்டி
உன் செழிப்பைத்தான் காட்டி விட்டாய்
பஞ்சாங்கத்தைப் பார்த்துத்தானே
நீ மாப்பிள்ளையும் தேர்ந்தெடுத்தாய்
யோனிப் பொருத்தம் கூச்சமின்றி
சொல்லி வைத்தான் ஜோசியனும்
சீர்ச் செனத்தியில் குறைவில்லை
நீ கொடுத்த சீதனமும் குறைவில்லை
உன் அழுகைப் பாசத்திலும்
நேசத்திலும் எள்ளவும் குறைவில்லை
ஆ
....னா
.........லு
.............ம்
மருத்துவத்தின் சோதனையில்
அவன் நோவு
என்னவென்று பார்த்தாயா?
பொருத்தங்கள் அத்தனையும்
பொறுப்பாகப் பார்த்தவனே -
அவன் மரம் போர்த்த உடலைத்தான்
என்னவென்றறிவாயா?
தரம் குன்றி அறம் குன்றி
பெரும் குடிநோயில் வீழ்ந்தவனை
குலமழிக்கவா நீயுமெனக்கு
பொறுப்பாகக் கட்டி வைத்தாய்?
இ
...னி
.......யு
..........ம்
தந்தையென்றே உன்னையென்றும்
தரம் உயர்த்திக் காட்டிடாதே
அடேய்... தரம் கெட்ட ஆணின் கூட்டில்
தடித்துப் போன அங்கமே நீ
- மு.முகமது பாட்சா*
02 /04 /2016
No comments:
Post a Comment