Saturday, 28 April 2018

அவள் கூந்தலின் பூக்கள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், பூ
என் கவிதையொன்றை 
ஓர் ஓரமாய் 
எடுத்துவைத்துவிட்டு 
உறங்குகிறேன், 
அஃது உறங்காமல் 
என்னைப் பற்றிய 
ஒரு கட்டுரை எழுதுகிறது, 
அதன் விமர்சனங்களில் 
கிழிந்து தொங்கும் என்னில் 
நாரெடுத்து 
பூத் தொடுக்கிறாள் 
கனவின் வழி வந்த கன்னி, 
கூந்தலுக்குள் உட்கார்ந்து கொண்டு 
கூடவே பயணிக்கிறேன், 
கவிதையைச் சூடிக் கொண்டதாக 
கர்வம் கொள்கிறாள், 
என்னைப் பற்றி 
அவளெழுதிய கவிதையில் 
நான் நாராகவும் 
அவள் பூவாகவும் இருக்கிறோம்
விழித்துப் பார்க்கிறேன் 
என்னருகில் 
அவள் கூந்தலின் பூக்கள்!

 மு.முகமது பாட்சா*
-

No comments:

Post a Comment

Popular Posts