
திக்ருவின் நிலையைக் கடத்தி நிற்கிறேன்
சூஃபியின் இதயத்தில் திக்ரின் ஓசைகள்!
இதயம்தான் இறைவனின் ஆசனமாம்!
இறந்தால் ஆசனம் சிதைந்திடுமே? !
திக்ருகள் பட்டாம் பூச்சிகளாய்ப் பறந்து
அர்ஷின் காலடியில் அடைக்கல மாகுமாம்!
மறுமையின் நம்பிக்கையில் கேள்வியை வைக்கிறேன்.
சிரித்துவிட்டுச் சொல்கிறான் அந்தச் சூஃபிக் கிழவன்
'நம்பிக்கை யில்லாமலா வாழ்க்கையை நகர்த்துகிறாய்?'
எங்கோ ஒரு மூலையில்
சிறு சிறு பொறிகளாய் மனச் சிதறல்களும்...
தேடியும் பதில் கிடைக்காத அந்திம வனத்தில்
தஸ்பியைத் தேடுகிறது என் விரல்கள்!
- மு.முகமது பாட்சா*
07/04/2016
No comments:
Post a Comment