Thursday, 5 April 2018

தூங்கிக் கொள்கிறேன்

தானியங்கு மாற்று உரை இல்லை.

நான் 
சற்றுத் தூங்கிக் கொள்கிறேன்... 
எனக்கான தூக்கத்தை 
யாரும் கெடுத்து விடாதீர்கள் ! 
ஆசையைத் துறந்த எனக்கு 
தூக்கத்தை 
துறக்கத் தெரியவில்லை ! 
தூங்கும்போது - நான் 
தியானிப்பதாகவே... 
பொய்ச்சொல்லிக் கொள்கிறேன்! 
குடும்ப வாழ்வை நேசித்த வரை 
தூக்கத்தைத் தொலைத்திருந்தேன்! 
ஆசையைத் துறந்த பிறகுதான் 
தூக்கம் நிம்மதியாக வருகிறது! 
ஆசையில் தூக்கம் அடங்குமா? 
தெரியவில்லை ! - ஆனாலும் 
தூங்கிதான் ஆக வேண்டும் 
ஒரேடியாகத் தூங்கும் வரை!

- மு.முகமது பாட்சா*
05/04/2016 

No comments:

Post a Comment

Popular Posts