Thursday, 12 April 2018

உடைந்து கிடக்கிறது



இழவு வீட்டின் ஒப்பாரிகளில் 
எங்காவதொரு மூலையில் 
மது பாட்டில்கள் உட்கார்ந்திருக்கின்றன,

வன்புணர்வுகளின் வழக்குகளில் 
மறைந்திருக்கும் மது பாட்டில்கள் 
எப்போதுமே கண்களுக்குத் தெரிவதில்லை...

அரசியல் கூட்டங்களைக் கூட 
மது பாட்டில்களும், 
பிரியாணி பொட்டலங்களும்தான் 
வசியம் வைத்து வரவழைக்கின்றன,

சுயம் கற்றுக் கொடுக்கும் 
மது பாட்டில்கள் 
உறவுகளை நேசிக்கக் கற்று தருவதேயில்லை,

வீதிகளில் விழுந்து கிடப்பது 
குடிகாரர்கள் மட்டுமல்ல... 
தேசத்தின் அவமானமும்தான்,

ஆலை ஓநாய்களின் 
இதழ்க்கடைகளில் ஒட்டியிருக்கின்றது... 
ஏழைகளின் பச்சை ரத்தம் ,

இப்போதுதான் மெல்லிய விடியல் 
புரட்சியுடன் புறப்பட்டிருக்கிறது,

வீதிகளில் உடைத்துக் கிடப்பவை 
மது பாட்டில்கள் மட்டுமல்ல, 
அரசாங்கத்தின் பொய் முகங்களும்தான்....

இது போராட்டத்தின் உச்சமல்ல 
போருக்கு முன்பாக நடத்தும் 
ஓர் ஒத்திகை மட்டும்தான்!

- மு.முகமது பாட்சா*
12/04/2017

No comments:

Post a Comment

Popular Posts