
திருவிழாவில் ஊர்வலம் போன
சாமிக்குத் தெரியாது...
சாதிச் சண்டைகள் நடக்குமென்று!
கும்பிடப் போனவர்கள்
குத்திக் கொள்கிறார்கள்...
ஆம் குத்திக் கொல்கிறார்கள்!
சாமிக்குச் சேதாரம் ஆகாமல்
காவல்துறைப் பாதுகாப்பு !
சாதிப் பார்க்காத காதலர்களுக்குள்
சங்கடங்கள் நுழைகிறது!
சாமியை மறந்துப் போனவர்கள்
பரம்பரை நியாயம் தீட்டுகிறார்கள்!
வாழ்விற்கு
வரம் கேட்டுப் போனவன் வீட்டில்
சாவிற்குச் சங்கொலிக் கேட்கிறது!
சாமி இல்லை! இல்லவே இல்லை!
சாதிக்குப் பறிக் கொடுத்தவள்
சாமிக்கு அர்ச்சனைச் செய்கிறாள்!
வலிக்கு நிவாரணமாய்ச் சாமி!
வலிகளுக்கும் காரணமாய்ச் சாமி!
சாமி ஊரை விட்டுப் போய்
ரொம்ப நாளாச்சி!
வேதனைத் தாங்காமல் சொல்கிறார்
இவரும் வேத விற்பன்னர்!
- மு.முகமது பாட்சா*
28/04/2016
No comments:
Post a Comment