மனம்
செறிவாக இருப்பதேயில்லை
வெற்றிடங்களை வைத்துக் கொண்டு
நிரப்புவதற்காக
பொருட்களைத் தேடிக் கொண்டேயிருக்கிறது,
அஃதோர்
எல்லையில்லா வானத்தை விரிக்கிறது
வசந்தங்களைத் தேடியலைகிறது
துயரங்களுக்குள்
துப்பட்டா போட்டு பதுங்கிக் கொள்கிறது,
ஆசைகளை அடுக்கி வைத்து
மாளிகையெழுப்பி உட்கார்ந்து கொள்கிறது,
பசி தீராமல்தான் அலைகிறது...அலைகிறது
அலைந்து கொண்டேயிருக்கிறது...
வெற்றிடங்களை இன்னமும்
நிரப்ப முடியாமல் தவிக்கிறது...
தவ போகர்களின் மனத்திலும்
புகழென்ற எச்சத்தை ஒட்டிவைத்துவிட்டு
தத்துவம் பேசித் திரிகின்றது,
- மு.முகமது பாட்சா*
27/04/2017
செறிவாக இருப்பதேயில்லை
வெற்றிடங்களை வைத்துக் கொண்டு
நிரப்புவதற்காக
பொருட்களைத் தேடிக் கொண்டேயிருக்கிறது,
அஃதோர்
எல்லையில்லா வானத்தை விரிக்கிறது
வசந்தங்களைத் தேடியலைகிறது
துயரங்களுக்குள்
துப்பட்டா போட்டு பதுங்கிக் கொள்கிறது,
ஆசைகளை அடுக்கி வைத்து
மாளிகையெழுப்பி உட்கார்ந்து கொள்கிறது,
பசி தீராமல்தான் அலைகிறது...அலைகிறது
அலைந்து கொண்டேயிருக்கிறது...
வெற்றிடங்களை இன்னமும்
நிரப்ப முடியாமல் தவிக்கிறது...
தவ போகர்களின் மனத்திலும்
புகழென்ற எச்சத்தை ஒட்டிவைத்துவிட்டு
தத்துவம் பேசித் திரிகின்றது,
- மு.முகமது பாட்சா*
27/04/2017
No comments:
Post a Comment