
கடவுளின் வீட்டின் முன் நின்று
பிரார்த்தனைகளை
வீசிக் கொண்டிருந்தார்கள்,
சாத்தானும் அங்குதான்
முகாம் போட்டு உட்கார்ந்திருந்தான்.
காணிக்கைகளை
விழுங்கிப் பருத்த உண்டியல்,
பிரார்த்தனைகளின் மீதுதான்
பஞ்சணையை விரித்துப் படுத்து
குறட்டை விட்டுக் கொண்டிருந்தது...
கஷ்டங்களை அகல்களிலூற்றி
தீபங்களை ஏற்றி வைத்துச் செல்லும்
அவர்களின் வயிறுகளிலும்
கற்பூரம் எரிந்து கொண்டிருக்க...
அர்ச்சகர்களின் வீட்டு உலைகளில்
பிரார்த்தனைகளே சோறுகளாக
பொங்கிக் கொண்டிருந்தன.
நேர்த்திக்கடன் சோற்றுக்காக
வாசலில் காத்துக் கிடக்கும்
பிச்சைக்காரர்கள்,
சோறு போட்டவர்களைத்தான்
சாமி யென்று
கும்பிட்டு கொண்டிருந்தார்கள்.
- மு.முகமதுபாட்சா*
03/04/2017
No comments:
Post a Comment