
அம்மாவின் கவிதையில்
முத்தங்கள் மிளிர்கின்றன!
ஓரப் பார்வையில் அவள்வீசும்
புன்னகைக் கவிதையை
யார்தான் எழுதமுடியும்?
கற்பனைக்குள் அடங்காத கவிதையவள்
அவளின்
வெப்ப மூச்சுக் காற்றின் கவிதைக்கு
இலக்கணத்திலேது பிழை!
நானெழுதும்
மொத்தக்கவிதையும் கூட
அவளுக்குத்தான் சொந்தம்...
ஏனென்றால்,
நானே அவளெழுதிய கவிதைதான் !
- மு.முகமது பாட்சா*
12/04/2017
No comments:
Post a Comment