
மெழுகுவர்த்தியைப் பாராட்டுகிறோம்
தீக்குச்சிகளை மறந்துவிட்டு
தண்ணீரைச் சேந்தியது வாளி மட்டுமல்ல
தாம்புக் கயிறும்தான்
வேர்கள்
நீரைத்தேடி அலையவில்லையென்றால்
விருட்சங்கள் தலையாட்ட முடியாது
எறிந்தவனின் பந்து பறக்கிறது
காற்றை எளிதாக மறந்துவிடுகிறோம்
துரோணனின் சூழ்ச்சிதான்
ஏகலைவனின் கட்டை விரலை
காணிக்கையாகக் கேட்டது
நிழலை இருட்டென்றுதான் சொல்லுகிறோம்
இருட்டுதான்
வெளிச்சத்தை அடையாளம் செய்கிறது
வனங்களுக்குள்
பதுங்கிக்கொள்கிறது மகா பிரபஞ்சம்
கடலுலகம் காட்சிப் பொருளல்ல...
ஆன்மாவிற்கு அடையாளம் கிடையாது
ஆனாலும்
பொய்யின் மெய் தினந்தினம் புலம்புகிறது
- மு.முகமது பாட்சா*
18 /04 /2018
No comments:
Post a Comment