Thursday, 19 April 2018

சன்னலின் வெளிச்சம்

சன்னலின் வெளிச்சம்

தானியங்கு மாற்று உரை இல்லை.

நானில்லாத அறை
தேநீர் கோப்பையை வெறித்துப் பார்க்க
நீண்ட வெளிச்சம்
சன்னலுக்குள் வேகமாக நுழைகிறது
சன்னலின் மறுபக்கம்
சில முகங்கள் எட்டிப் பார்க்கின்றன
நெருஞ்சி முள்ளின் பதம் நீக்கி
குருவியொன்று கனிக் கொய்கிறது
மூங்கிலில் நெளியும் பச்சைப்பாம்பு
இலைகளை சரசரக்க
வேட்டை முடித்து ஓணான் நகர்கிறது
எங்கேயோ கேட்கும் அழுகுரல்
ஓர் இழவிற்கானது
நீராடாத வாய்க்காலின் பனைமரம்
மேகங்களுக்காகவே காத்திருக்கலாம் 
வார்த்தையை ஒட்டிக் கொண்ட விழிகள்
சன்னலுக்கு வெளியே காத்திருக்க
சூடாறிய கோப்பையில்
நான் மெல்லிய ஆடையாகப் படிகிறேன்

- மு.முகமது பாட்சா*
19/04/2018







No comments:

Post a Comment

Popular Posts