Sunday, 8 April 2018

கிழவர்

தினம் கீரை விற்கும் 
அந்தக் கிழவருக்கு 
என்ன தெரியும்?

செத்துக் கொண்டிருக்கும் 
வயலையும் 
ஒட்டிக் கொண்டிருக்கும் 
வறுமையையும் தவிர,

ஓடிப் போன 
மகளை நினைத்தால், 
கிழவருக்கும் சந்தோசம்

காட்டு வேலையில் 
உட்கார்ந்து, எப்படிதான் 
கரையேற்ற முடியும் ?

காலண்டரிலிருந்த 
கடவுளின் கண்களைக் கூட 
கரப்பான் பூச்சிகள் 
களவாடிச் சென்றுவிட்டன...

ஆனாலும் கிழவர் 
பொறுப்பாக என்றுமே 
பூப் போட மறந்ததில்லை...

கடவுளுக்குதான் கண்ணில்லையே.

- மு.முகமது பாட்சா*
08/04/2017



No comments:

Post a Comment

Popular Posts