Thursday, 12 April 2018

கருப்புக்கொடி

கருப்பு கொடி

படம் இதைக் கொண்டிருக்கலாம்: இரவு

இருண்டு போன நம்பிக்கையை
கைகளில் பிடித்து திரிகிறோம்
சன்னல்களை அடைத்துவிட்டு
காற்று வருகிறதென்று 
நன்றாகக் கதை சொல்கிறாய்
காய் நறுக்கும் கத்திகளெல்லாம் 
துருப்பிடித்துக் கிடக்கும் போது
ஆள் நறுக்கும் ஆயுதங்களை 
விற்பதற்காக வந்துவிட்டாய்...
ஏர் கலப்பையை பற்றி 
ஏதாவது தெரியுமா?
நிலம் விடும் 
பெரு மூச்சினையெல்லாம்
வளம்தரும் 
எண்ணெய் வயல் என்கிறாய்...
பால் நரம்பை நறுக்கிவிட்டு
அன்னையென்று சொல்வது அக்கிரமம்
நீ குடிக்கின்ற நீருக்குத் 
தடை வாங்கினால்
எத்துணை நாள்தான் உயிர் பிழைப்பாய்?
கோலோச்சுவது உன் அகம்பாவம்
குடிகளின் கைகளில்
இப்போது கொடி எழுகிறது
வயிற்றுத் தீ வானில் எட்டும் போது
எரிந்துவிடும் சர்வாதிகாரம் .

-மு.முகமது பாட்சா*

12/04/2018

No comments:

Post a Comment

Popular Posts