Thursday, 5 April 2018

நீரை சபித்தான்

தானியங்கு மாற்று உரை இல்லை.

தன் மண்டைக்குள் புழுவொன்று 
ஓடிக் கொண்டிருப்பதாக சொன்னவன்
தான் காணாமல் போய்விட்டதாக
காவல் நிலையத்தில் புகார் செய்தான்
காயங்களோடு ஓடி வந்தவன்
காற்று துரத்தியடித்ததாகச் சொன்னான்
நீர்தான் முதல் எதிரியென்றவன்
ஆற்று மணலில் படுத்து உறங்கினான்
சாரல் மழை விழுந்தாலே 
சப்தம் போட்டு திட்ட ஆரம்பித்தான்...
நெருப்பு பெய்கிறது என்றான்
ஓடியோடி 
அவன் இருப்பிடம் நகர்ந்து விட்டது
ஆனாலும் அவன் மண்டையில் 
துரப்பணம் தூர் வாரிக்கொண்டிருந்தது....
சம்மட்டியின் அடி வேகமாக விழுந்தது
காதுகளை மூடிக் கொண்டு கத்தும் அவனை
பைத்தியம் என்று நினைக்காதீர்கள்
உங்கள் வாகனத்தை நகர்த்தும் பெட்ரோல்
அவன்  நிலத்தடி நீராக இருக்கலாம். 

- மு.முகமது பாட்சா*
05/04 /2018


No comments:

Post a Comment

Popular Posts